புதிய அத்தியாயத்தை தொடங்கும் விஜய்க்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்து

தவெக தலைவர் விஜய்க்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
புதிய அத்தியாயத்தை தொடங்கும் விஜய்க்கு  நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்து
Published on

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் எடப்பாடி தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டின் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன.2024-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கி, 2026-ம் ஆண்டு மாபெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகியிருக்கிறது.

இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டரில் “அனைவரும் உங்களை நேசிப்பதால் மட்டுமல்ல பல வெறுப்புகளாலும் இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். அனைத்து கூச்சல்களுக்கும் வெறுப்புகளுக்கும் மத்தியிலும், உங்கள் இருப்பை நீங்கள் நிலைநிறுத்தி காட்டியுள்ளீர்கள். இவை உங்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் மீதான நேசத்தால் கிடைத்தவை.நான் முன்பே சொன்னது போல், நீங்கள் அனைவரின் உணர்வாக இருக்கிறீர்கள். இந்த வெற்றி அதற்கு ஒரு சான்றாகவும், ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவும் உள்ளது. ஜோசப் விஜய் சார். இது உங்களின் கடினமாக உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி. தளபதி, நீங்கள் இதற்கு முழு தகுதியுடையவர்” என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com