உடல் எடை குறைத்த ரகசியத்தை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்


உடல் எடை குறைத்த ரகசியத்தை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்
x
தினத்தந்தி 16 Aug 2025 3:25 PM IST (Updated: 16 Aug 2025 5:50 PM IST)
t-max-icont-min-icon

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கடுமையான உடற்பயிற்சிகள் செய்தும், உணவு கட்டுப்பாட்டுகளை கடைபிடித்தும் தனது உடல் எடையை வெகுவாக கட்டுப்படுத்தி இருக்கிறார்.

சென்னை,

தயாரிப்பாளரும், நடிகருமான சுரேஷ் மற்றும் நடிகை மேனகா தம்பதியினரின் இளைய மகளான கீர்த்திசுரேஷ். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைதொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன் போன்ற படங்களில் நடித்து உள்ளார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான ரகு தாத்தா படத்தில் இவரது காதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது. நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான நடிகையர் திலகம் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கிடைத்தது. இவர் பாலிவுட்டில் வருண் தவானுடன் இணைந்து 'பேபி ஜான்' என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கன்னிவெடி’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்

திருமணத்துக்குப் பிறகு கூடியிருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது கடுமையான உடற்பயிற்சிகள் செய்தும், உணவு கட்டுப்பாட்டுகளை கடைபிடித்தும் தனது உடல் எடையை வெகுவாக கட்டுப்படுத்தி இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ், திருமணத்துக்குப் பிறகும் படங்கள் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் உடல் எடை குறைத்த ரகசியத்தை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். “திருமணத்துக்குப் பிறகு உடல் எடை சற்று கூடிவிட்டேன். இதனால் கார்டியோ உள்ளிட்ட பயிற்சிகளை செய்து உடல் எடையைக் குறைக்க போராடினேன். வாரத்துக்கு 5 மணி அடிப்படையில் உடற்பயிற்சி செய்து சுமார் 9 கிலோ எடையைக் குறைத்து இருக்கிறேன். சரியான பயிற்சிகளும், திட்டமிட்ட உணவு பழக்கங்களும் ஒன்று சேரும்போது எதிர்பார்த்த தீர்வை பெற முடியும். ஆண்களைப் போல பெண்களும் உடற்பயிற்சியில் அக்கறை காட்டுவது நல்லது” என்று கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டார்.



1 More update

Next Story