இந்திய பிரதிநிதியாக... கேன்ஸ் பட விழாவில் நடிகை குஷ்பு

இந்திய பிரதிநிதியாக... கேன்ஸ் பட விழாவில் நடிகை குஷ்பு
Published on

பிரான்சில் உலக புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா தொடங்கி உள்ளது. வருகிற 27-ந்தேதி வரை இந்த விழா நடக்கிறது. இதில் உலகில் பல்வேறு மொழிகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்தியாவில் இருந்து அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி, ராகுல்ராய் நடித்த ஆக்ரா, மணிப்பூரில் 1990-ல் வெளியான இஷானோ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த விழாவில் கலந்து கொள்ள மத்திய மந்திரி எல்.முருகன் தலைமையில் பட குழுவினர் சென்றுள்ளனர். நடிகை குஷ்புவும் இந்திய பிரதிநிதியாக பங்கேற்கிறார். இதுகுறித்து குஷ்பு வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "அனைவருக்கும் வணக்கம், கேன்ஸ் பட விழாவில் பங்கேற்க பிரான்ஸ் வந்துள்ளேன். மதிப்பு மிகுந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய பிரதிநிதியாக கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு அளித்த மத்திய மந்திரி அனுராக் தாகூர் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்துக்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.

கேன்ஸ் பட விழாவில் ஐஸ்வர்யாராய், அனுஷ்கா சர்மா, மிருனாள் தாக்கூர், சாரா அலிகான் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com