ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த நடிகை

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த நடிகை
Published on

பிரபல வங்காள நடிகை ஸ்ரீலேகா மித்ரா. இவர் வங்க மொழியில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்ரீலேகா மித்ரா தற்போது ஆன்லைன் மோசடியில் சிக்கி லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளார். தனது 48-வது பிறந்த நாளை கொண்டாட தயாராக இருந்த ஸ்ரீலேகா மித்ராவுக்கு அறிமுகம் இல்லாத ஒருவரிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசியவர் சொன்ன செயலியை ஸ்ரீலேகா மித்ரா தனது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியானார்.

இதுகுறித்து ஸ்ரீலேகா மித்ரா கூறும்போது, "இதுவரை என்னை புத்திசாலி என்று நினைத்து இருந்தேன். இப்போது எனது முட்டாள்தனத்தால் ஏமாந்து நிற்கிறேன். லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து போலீசிலும், சைபர் கிரைமிலும் புகார் அளித்து இருக்கிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com