

பிரேமம் படம் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். அந்த படத்தில் அவரது செலின் கதாபாத்திரம் அவருக்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கியது.காதலும் கடந்து போகும், ஜுங்கா, கவண் ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார். தனுசுடன், பவர் பாண்டி படத்தில் நடித்திருக்கிறார்.
இது தவிர பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் எலிசா தாஸ் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் மடோனா செபாஸ்டியன். சில காட்சிகளில் மட்டுமே படத்தில் வந்திருந்தாலும் விஜய்யின் தங்கையாக லியோவில் கவனம் ஈர்த்திருந்தார். அவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பினை பெற்றிருந்தது. கடைசியாக ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்து இருந்தார். பென்ஸ் படத்தில் மடோனா செபாஸ்டியன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளையராஜாவின் தென்றல் வந்து என்னை தொடும் பாடலை பாடி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram