கவர்ச்சியில் கிறங்கடிக்கும் மாளவிகா மோகனன்

கவர்ச்சி தூக்கலான தனது புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் மாளவிகா மோகனன் வெளியிட்டு வருகிறார். முன்பை விட கவர்ச்சி காட்டும் அவரது புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
கவர்ச்சியில் கிறங்கடிக்கும் மாளவிகா மோகனன்
Published on

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மாளவிகா மோகனன் விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்திலும், தனுசுக்கு ஜோடியாக 'மாறன்' படத்திலும் அடுத்தடுத்து நடித்து பிரபலமானார். ஆனாலும் அவருக்கு பட வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி வரவில்லை. கதைக்காக கவர்ச்சியாக நடிக்க தயார் என்று அறிவித்தபோதிலும் வாய்ப்புகள் வராததால் விரக்தியில் இருந்தார்.

இதையடுத்து, 'சினிமா துறையில் விரக்தி கூடாது, தொடர் முயற்சிகளே கைகொடுக்கும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி' என நண்பர்கள் ஊக்கம் அளித்திருக்கிறார்கள். இதனால் மாளவிகா மோகனன் தனது கவனத்தை உடற்பயிற்சிகளில் செலுத்தி வருகிறார். கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றி வருகிறார். அதேவேளை கவர்ச்சி தூக்கலான தனது புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டு வருகிறார். முன்பை விட கவர்ச்சி காட்டும் அவரது புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

'அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்' என்ற பழமொழியை மாளவிகா மோகனன் சரியாக பின்பற்ற தொடங்கியிருக்கிறார் என திரையுலகினர் கிசுகிசுக்கிறார்கள். எது எப்படியோ இனி வரும் காலம் மாளவிகா மோகனன் ரசிகர்களுக்கு விருந்து தான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com