படப்பிடிப்பில் விபத்து நடிகை மஞ்சுவாரியர் காயம்

படப்பிடிப்பில் மஞ்சுவாரியர் நடித்தபோது, எதிர்பாராத வகையில் அவருக்கு அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது.
படப்பிடிப்பில் விபத்து நடிகை மஞ்சுவாரியர் காயம்
Published on

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். நடிகர் திலீப்பை காதல் திருமணம் செய்த இவர் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பிறகு நடிகை காவ்யா மாதவனை திலீப் 2வது திருமணம் செய்துகொண்டார். கணவரை பிரிந்த பிறகு மஞ்சு வாரியர் மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

மலையாள பெண் சினிமா கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து நடிகைகள் நலனுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். மஞ்சுவாரியர் நடித்த ஹவ் ஓல்டு ஆர் யு படம் தமிழில் ஜோதிகா நடித்து 36 வயதினிலே என்ற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜாக் அண்ட் ஜில் என்ற மலையாள படத்தில் மஞ்சுவாரியர் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் ஹரிபேடு என்ற பகுதியில் நடந்து வருகிறது. சண்டை காட்சியொன்றை படமாக்கினர். இதில் மஞ்சுவாரியர் நடித்தபோது எதிர்பாராத வகையில் அவருக்கு அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார். உடனடியாக அவரை படக்குழுவினர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com