ரஜினிகாந்த் சென்ற பாபாஜி குகையில் நடிகை தியானம்

ரஜினிகாந்தை தொடர்ந்து ஆத்மிகாவும் இமயமலைக்கு சென்று பாபாஜி குகையில் தியானம் செய்துள்ளார்.
ரஜினிகாந்த் சென்ற பாபாஜி குகையில் நடிகை தியானம்
Published on

தமிழில் மீசைய முறுக்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆத்மிகா. கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே, திருவின் குரல் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது மிஸ் மேகி என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த நிலையில் ரஜினிகாந்தை தொடர்ந்து ஆத்மிகாவும் இமயமலைக்கு சென்று பாபாஜி குகையில் தியானம் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ஆத்மிகா வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு தெய்வீக அழைப்பு வந்ததன் காரணமாக கடினமான பயணத்தை மேற்கொண்டு பாபாஜி குகைக்கு சென்றேன் அந்த குகையில் உட்கார்ந்து தீவிரமாக தியானம் செய்தேன்.

அப்போது என் வாழ்க்கையில் இதற்கு முன் அனுபவித்திராத சக்தியை உணர்ந்தேன். தியானத்துக்கு பின் என் முழு பார்வையும் மாறியது. பாபாஜியை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது பாபாஜி குகைக்கு வந்து தியானம் செய்து தெய்வீக அனுபவத்தை பெற வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com