

திருப்பதி,
நடிகை மீனாட்சி சவுத்ரி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த மீனாட்சி சவுத்ரிக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘கொலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’, விஜய் நடித்த ‘தி கோட்’, துல்கர் சல்மானுடன் ‘லக்கி பாஸ்கர்’, வருண் தேஜுடன் ‘மட்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் மூலம் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
சமீபத்தில் மீனாட்சி சவுத்ரி நடித்த ‘அனகனகா ஓக ராஜு’ திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகை மீனாட்சி சவுத்ரி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த மீனாட்சி சவுத்ரிக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் வழங்கினர்.
தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவர்களுடன் மீனாட்சி சவுத்ரியும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.