திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை மீனாட்சி சவுத்ரி சாமி தரிசனம்!

அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை மீனாட்சி சவுத்ரி சாமி தரிசனம்!
Published on

தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பல படங்களில் இவர் நடித்திருந்தார். அதன்படி, ஆர்.ஜே.பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' விஜய்யின் 'தி கோட்' , துல்கர் சல்மானுடன் லக்கி பாஸ்கர் , வருன் தேஜுடன் மட்கா ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார்.

சமீபத்தில் அனகனகா ஓக ராஜு என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை மீனாட்சி சவுத்ரி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பின்னர், சாமி தரிசனம் வெளிவந்த நடிகையுடன், ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com