ஓட்டுனர் இல்லாத காரில் பயணித்த நடிகை மீனா

டிரைவர் இல்லாமல் ஏ.ஐ. மற்றும் பலவிதமான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தானாகவே இயங்கும் காரில் நடிகை மீனா பயணித்துள்ளார்.
ஓட்டுனர் இல்லாத காரில் பயணித்த நடிகை மீனா
Published on

தனது 3 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி மக்களால் கொண்டாடப்படும் நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பலரது கவனத்தையும் பெற்றார். பின் கொஞ்சம் இடைவேளைக்கு பிறகு என் ராசாவின் மனசிலே படத்தில் நாயகியாக அறிமுகமாக அவரது பயணம் வெற்றிப் பயணமாக அமைந்தது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், அஜித்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இப்போது தனது கதாபாத்திரத்திற்கு முக்கியம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது மீனா நடித்த ‘திரிஷ்யம் 3’ படம் வரும் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒட்டுனர் இல்லாத காரில் பயணித்த வீடியோ காட்சிகளை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில், ‘ஹாய், என் ஓட்டுனரை உங்களுக்கு உங்களுக்கு அறிமுகப்படுத்தட்டுமா? ’ என கேட்கிறார். தொடர்ந்து காரில் ஓட்டுனர் இருக்கையை காட்டி ‘ஓட்டுனர் இல்லாத டாக்சி’ என்கிறார். மீனா வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் வைரலாகிறது.

உலகில் பல்வேறு நாடுகளில் டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்கள் இருக்கின்றன. இந்தியாவிலும் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிரைவர் இல்லாமல் ஏ.ஐ. மற்றும் பலவிதமான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தானாகவே கார் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

X

Daily Thanthi
www.dailythanthi.com