ரஜினியுடன் நடிப்பு... கணவரின் கனவை நனவாக்கிய நடிகை மேக்னா ராஜ்

தனது 8-வது திருமண நாளையொட்டி மேக்னா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ரஜினியுடன் நடிப்பு... கணவரின் கனவை நனவாக்கிய நடிகை மேக்னா ராஜ்
Published on

சென்னை,

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் தீராத ஆசையை, அவரது மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ் நிறைவேற்றியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதன் மூலம், தனது கணவரின் நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ளதாக அவர் உருக்கத்துடன் பதிவிள்ளார்.

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த சிரஞ்சீவி சர்ஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அவர் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிரஞ்சீவிக்கு, ஒரு முறையாவது அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே மிகப்பெரிய லட்சியமாக இருந்தது. ஆனால், கடந்த 2020-ஆம் ஆண்டு அவர் எதிர்பாராத விதமாக மறைந்ததால், அந்தக் கனவு பாதியிலேயே நின்றது.

Also Read
ரஜினி படம் - ’விலக அதுதான் காரணம்’... மனம் திறந்த சுந்தர்.சி
ரஜினியுடன் நடிப்பு... கணவரின் கனவை நனவாக்கிய நடிகை மேக்னா ராஜ்

தற்போது தனது 8-வது திருமண நாளையொட்டி (மே 2) மேக்னா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில்,

"இந்த ஆண்டுத் திருமண நாள் வெறும் தேதியல்ல, அது ஒரு உணர்வு. நீங்கள் அவரை கடவுளாகப் பார்த்தீர்கள்! நான் கனவிலும் நினைக்காத வகையில் என்னை ரஜினி சாருடன் நடிக்க வைத்துவிட்டீர்கள். இந்த வெற்றி, இந்த மைல்கல், இந்தத் திரைப்படம் என அனைத்தும் உங்களுக்கே சொந்தம்..." என்று பதிவிட்டுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் மேக்னா ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com