2-வது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மேக்னாராஜ்

நடிகை மேக்னாராஜ் 2-வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்திகள் வலம் வந்தது.
2-வது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மேக்னாராஜ்
Published on

பெங்களூரு,

கன்னட திரையுலகின் முன்னணி நடிகை மேக்னாராஜ். இவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்த போது கடந்த 2020-ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்போது மேக்னாராஜுக்கு ஒரு மகன் இருக்கிறான். இளம்வயதிலேயே கணவரை இழந்த மேக்னாராஜ் 2-வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்திகள் வலம் வந்தது. இந்த நிலையில் 2-வது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை மேக்னாராஜ் தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீயே எனக்கு வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவர் எப்போது இருந்தாலும் தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜாதான் என முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. சில கன்னட படங்களில் நடித்து வரும் மேக்னா ராஜ், மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com