21 வயதில் தாயான நடிகை...ரசிகர்கள் வாழ்த்து

ஓடிடி பிரியர்களுக்கு 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' வெப் தொடரைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும்.
வாஷிங்டன்,
பொதுவாக நடிகைகள் சீக்கிரமே திருமணம் செய்து கொள்வதிலும், குழந்தைகளைப் பெற்றெடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அப்படிச் செய்தால் தங்கள் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் சில நேரங்களில், ஆச்சரியமான விஷயங்கள் நடக்கும்.
இப்போது, ஒரு நடிகை 21 வயதில் பெண் குழந்தைக்கு தாயாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். அந்த நடிகை யார் தெரியுமா?.
ஓடிடி பிரியர்களுக்கு 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' வெப் தொடரைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். அதில் லெவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மில்லி பாபி பிரவுன். இவர்தான் அந்த நடிகை.
மில்லி சில வருடங்களாக ஜேக் போங்கியோவி என்பவருடன் டேட்டிங் செய்து வந்தநிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் திருமணம் செய்து கொண்டார்.
மில்லிக்கு 20 வயது இருக்கும்போது திருமணம் நடந்தது. இப்போது, மில்லி ஒரு வருடத்திற்குள் பெண் குழந்தையின் தாயாகிவிட்டதாக அறிவித்துள்ளார். இருப்பினும், குழந்தையை தத்தெடுத்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.






