படங்களின் தேர்வு குறித்து மனம் திறந்த நடிகை மிருணாள் தாக்கூர்

சீதா ராமமின் சீதா மகாலட்சுமி, ஹாய் நானாவின் யஷ்னா போன்ற கதாபாத்திரங்களுக்காக காத்திருப்பதாக மிருணாள் தாக்கூர் கூறியுள்ளார்.
படங்களின் தேர்வு குறித்து மனம் திறந்த நடிகை மிருணாள் தாக்கூர்
Published on

துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் ஜோடியாக நடித்து கடந்த வருடம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெளியான சீதா ராமம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 1964-ம் ஆண்டு கால கட்ட பிண்ணனியில் படத்தை எடுத்து இருந்தனர். காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் ராணுவ அதிகாரி முகவரி இல்லாமல் தனக்கு வரும் காதல் கடிதங்களை படித்து அதை அனுப்பிய பெண்ணை கண்டுபிடிக்கிறார். அவளுடன் அவரால் சேர்ந்து வாழ முடிந்ததா என்பதை உருக்கமாக படமாக்கி இருந்தனர். காதல் கடிதங்களை அனுப்பும் பெண்ணாக மிருணாள் தாக்கூர் நடித்து இருந்தார். இதில் ராஷ்மிகா மந்தனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

இவர் தற்போது ஷானெல் தியோ இயக்கத்தில் "டகோயிட்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், படங்களின் தேர்வு குறித்து நடிகை மிருணாள் தாக்கூர் மனம் திறந்து பேசியுள்ளார். “சில படங்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தாலும், கனத்த இதயத்துடன் நான் வேண்டாம் என்றே சொல்லி விடுவேன். சீதா ராமமின் சீதா மகாலட்சுமி, ஹாய் நானாவின் யஷ்னா ஆகிய கதாபாத்திரங்கள் என் திரைப்பயணத்தின் மைல்கற்கள்!அது போன்ற கதாபாத்திரங்களுக்காக நான் காத்திருக்கிறேன். எவ்வளவு பெரிய வாய்ப்பாக இருந்தாலும், நான் சரியான படத்தை தேர்வு செய்யவே விரும்புகிறேன்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com