தேவி ஸ்ரீ பிர​சாத் ஜோடியாகும் நடிகை மிருணாள் தாக்கூர்

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ‘எல்லம்மா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
தேவி ஸ்ரீ பிர​சாத் ஜோடியாகும் நடிகை மிருணாள் தாக்கூர்
Published on

தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தமிழில் சிங்கம், மன்மதன் அம்பு, வெடி, சாமி ஸ்கொயர், சச்சின், வில்லு, வீரம், கங்குவா என ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் வெற்றிக்கு இவரது பாடல்களும் முக்கிய காரணம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் குபேரா படத்தில் தனுஷ் பாடியுள்ளார்.

இயக்குநர் வேணு யெல்டாண்டிஇயக்கத்தில் உருவாகும் ‘எல்​லம்​மா’ எனும் புதிய திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக அறிமுகமாகின்றார். இப்படத்தை தெலுங்கில் வரவேற்பை பெற்ற ‘பல​காம்’ என்ற படத்தை இயக்கிய வேணு எல்​டண்​டாடி இயக்​கு​கிறார்.

ஸ்ரீவெங்​கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் தயாரிக்​கின்​றனர். இதில் பார்சி என்ற கதா​பாத்​திரத்​தில் தேவி ஸ்ரீ பிர​சாத் நடிக்​கிறார். இப்​படம் தெலுங்​கு, தமிழ் உள்பட 5 மொழிகளில் உரு​வாகிறது. இதில் சாய் பல்​லவி அல்​லது கீர்த்தி சுரேஷ் ஆகிய இரு​வரில் ஒரு​வர் கதா​நாயகி​யாக நடிப்​பார்​கள் என்று முதலில் கூறப்​பட்​டது. இப்​போது, மிருணாள் தாக்​குரிடம் படக்​குழு பேசி வருவ​தாகத் தெரி​கிறது.

இந்தி நடிகை​யான மிருணாள் தாக்குர், சீதா ராமம் படம் மூலம் தென்​னிந்​தி​யா​விலும் புகழ்​பெற்​றார். அவர் தெலுங்​கில் நடித்த ஹாய் நன்​னா, பேமிலி ஸ்டார், கல்கி 2898 ஏடி, டெகா​யிட் ஆகிய படங்கள் அவருக்குப் புகழைப் பெற்​றுத் தந்​தன.

X

Daily Thanthi
www.dailythanthi.com