கனவில் வந்த அம்மன் - திருப்பணிக்கு மடிப்பிச்சை எடுக்கும் நடிகை நளினி


கனவில் வந்த அம்மன் - திருப்பணிக்கு மடிப்பிச்சை எடுக்கும் நடிகை நளினி
x
தினத்தந்தி 18 July 2025 8:17 PM IST (Updated: 18 July 2025 8:19 PM IST)
t-max-icont-min-icon

கனவில் அம்மன் வந்து கூறியதால், மடிப் பிச்சை ஏந்தி கோவில் திருப்பணிக்கு காணிக்கையாக வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நளினி நடிகரும், டைரக்டருமான ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் நளினி.

நடிகை நளினி அடிக்கடி கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் குறிப்பாக திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில் மற்றும் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டுள்ளார். இந்தநிலையில், ஆடி மாதம் பிறந்ததையொட்டி திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் வழிப்பட்ட பின் கோவில் வளாகத்தில் நின்று மடிப்பிச்சை ஏந்தினார். அம்மன் தனது கனவில் வந்து எனக்காக என்ன செய்யப் போகிறாய் என கேட்டதால் மடிப்பிச்சை ஏந்தி அதில் வரும் காணிக்கையை திருப்பணிக்கு வழங்குவதாக விளக்கம் அளித்துள்ளார்.

1 More update

Next Story