நடிகை நமீதா பகிர்ந்த கசப்பான அனுபவம்

எனக்கு திடீரென்று உடல் எடை அதிகமானது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.
நடிகை நமீதா பகிர்ந்த கசப்பான அனுபவம்
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த நமீதா திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துள்ளார். தற்போது தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து நமீதா கூறும்போது, ''எனக்கு திடீரென்று உடல் எடை அதிகமானது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது.

எனது உடல் மற்றும் சமநிலையற்ற ஹார்மோன் பிரச்சினைகள் மற்றவர்களுக்கு தெரியாது. யாரிடமேனும் சொன்னால்கூட அது சாதாரண விஷயம்தானே என்றார்கள். ஆனால் எனக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.

ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்றபோது எனது எடை கூடிய உடல் புகைப்படத்தை குளோசப் ஆக வெளியிட்டு ஏதேதோ குறிப்பிட்டு இருந்தனர். அதை பார்த்து வருத்தமானேன். இதனால் 25 கிலோ எடை வரை குறைத்தேன்.

எல்லோரிடமும் இண்டர்நெட் வசதி இருப்பதால் மனதில் நினைத்ததை எல்லாம் வெளியே கொட்டுகிறார்கள். என்னைப்பற்றி அவதூறு கருத்துக்கள் பதிவிட்டவர்கள் மீது புகார் அளிக்கலாம் என்று என்னிடம் கணவர் தெரிவித்தார். நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

ஒருவர் என்னை இன்ஸ்டாகிராமில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசினார். இதனால் அவரைப்பற்றிய விவரங்களை வெளியிட்டு புகாரும் அளித்தேன்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com