மழை வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமிதா பத்திரமாக மீட்பு!

சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.
மழை வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமிதா பத்திரமாக மீட்பு!
Published on

சென்னை,

'மிக்ஜம்' புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.

இந்தநிலையில் நடிகை நமிதா துரைப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சிக்கித் தவித்தார். சென்னை துரைப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை நமிதா பத்திரமாக மீட்கப்பட்டார்.

துரைப்பாக்கத்தில் திமுக நிர்வாகி ஏ.கே.ஆனந்த் தலைமையில் தன்னார்வலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உணவு, குடிநீர், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கச் சென்றபோது நடிகை நமிதா குடும்பத்தினர் மழை வெள்ளத்தில் தவிப்பது தெரிய வந்தது. முதல் மாடியில் சிக்கித் தவித்த நமிதா மற்றும் அவரது குடும்பத்தினரை தன்னார்வலர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் என்டிஆர்எப் மீட்டனர். அவர்களோடு சேர்த்து அப்பகுதியில் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்டோர் 8 படகுகளில் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.   

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com