தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது - எஸ்.பி.பி. மறைவுக்கு நடிகை நயன்தாரா இரங்கல்

பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகை நயன் தாரா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது - எஸ்.பி.பி. மறைவுக்கு நடிகை நயன்தாரா இரங்கல்
Published on

சென்னை,

பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகை நயன் தாரா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தெய்வீக குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த திரு எஸ்.பி பாலசுப்ரமணிய சாருடைய குரல், நம்முடைய எல்லா காலங்களும் காரணங்களும் பொருத்தி இருக்கும்.

நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. ஆயினும், உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும். உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது. எங்கள் வாழ்வில் உங்களின் ஆளுமை அப்படி.

நீண்ட காலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம் இல்லாமல் பிரியா விடை கொடுக்கிறோம். பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும். உங்களை பிரிந்து விடும் உங்கள் திரை உலக சகாக்களுக்கும், உலகமெங்கும் பரவி இருக்கும் உங்கள் எண்ணற்ற ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த ஆறுதல் செய்து இது என தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com