டைரக்டரை மணக்கும் நடிகை நிரஞ்சனி

நிரஞ்சனிக்கும், படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கும் காதல் மலர்ந்து தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளது.
டைரக்டரை மணக்கும் நடிகை நிரஞ்சனி
Published on

தமிழில் துல்கர் சல்மான், ரக்ஷன், ரிதுவர்மா, நிரஞ்சனி ஆகியோர் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. இந்த படத்தை தேசிங் பெரியசாமி இயக்கினார். இந்த படம் வெற்றிகரமாக ஓடி நல்ல வசூல் பார்த்தது. படத்தில் ரக்ஷன் ஜோடியாக நிரஞ்சனி நடித்து இருந்தார். நிரஞ்சனிக்கும், படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கும் காதல் மலர்ந்து தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளது. இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 25-ந் தேதி புதுச்சேரியில் நடக்கிறது. அஜித்குமார் நடித்து வெற்றிகரமாக ஓடிய காதல் கோட்டை படத்தின் இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகள் நிரஞ்சனி என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இரண்டாவது மகள் விஜயலட்சுமியும் நடிகையாக உள்ளார். நிரஞ்சனி பிரபல ஆடை வடிவமைப்பாளராகவும் இருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த காலா உள்ளிட்ட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும், ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவேன் என்றும் நிரஞ்சனி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com