45 வயதில் தாயானதை அறிவித்த நடிகை பத்மபிரியா

குழந்தையின் முதல் பிறந்தநாளையொட்டி நடிகை பத்மபிரியா புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
45 வயதில் தாயானதை அறிவித்த நடிகை பத்மபிரியா
Published on

நடிகை பத்மபிரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் குழந்தைக்கு ஓராண்டு நிறைவடைந்ததாகக் கூறி பதிவிட்டுள்ளார்.

2004ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சீனு வசந்தி லட்சுமி' என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். சேரன் இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’ படத்தில் நடிகை பத்மப்ரியா தமிழில் அறிமுகமாகினார். பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் என பல படங்களில் கவனம் பெற்றார். கடைசியாக பத்மப்ரியா ராம் இயக்கிய ‘தங்க மீன்கள்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

2014ம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பர் ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மீண்டும் 2022 முதல் மலையாளத்தில் நடிக்க தொடங்கியுள்ள பத்மபிரியா ஒரு தெக்கன் தள்ளு கேஸ், வண்டர் வுமன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை பத்மபிரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் குழந்தைக்கு ஓராண்டு நிறைவடைந்ததாகக் கூறி பதிவிட்டுள்ளார். கடந்த 10 வருட காலத்தில் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த அவர் தற்போது தனது குழந்தைக்கு முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ள தகவலை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை பத்மப்ரியாவுக்கு ‘பழசிராஜா’ படத்திற்காக சிறப்பு தேசிய விருது, கேரள விருதுகள் இரண்டு முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மலையாள திரைப்பட நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பில் இருந்து நடிகை பத்மபிரியா விலகியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com