நடிகை பவித்ரா கவுடாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: சிட்டிசிவில் கோர்ட்டு உத்தரவு

தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டியும், மகளின் படிப்புக்காகவும் ஜாமீன் வழங்கும்படி மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
பவித்ரா கவுடா
Published on: 

பெங்களூரு,

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட திரையுலகின் பிரபல நடிகர் தர்ஷன். அவரது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடா ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மனு தாக்கல்

தற்போது ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு 59-வது சிட்டிசிவில் கோர்ட்டில் நீதிபதி சுஜாதா முன்னிலையில் சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், ரேணுகாசாமி கொலையில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பவித்ரா கவுடா ஜாமீன் கோரி சிட்டிசிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டியும், மகளின் படிப்புக்காகவும் ஜாமீன் வழங்கும்படி மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் ரேணுகாசாமி கொலையில் தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருவதால், பவித்ரா கவுடாவுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்ககூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

அப்போது பவித்ரா கவுடாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் இன்று அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ள பிரதோஷ், ரேணுகாசாமி கொலை குறித்து சிட்டிசிவில் கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க உள்ளார். இது நடிகர் தர்ஷனுக்கு நெருக்கடியை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com