சூர்யாவின் 44-வது படத்தில் நடிகை பூஜா ஹெக்டே - படக்குழு அறிவிப்பு

சூர்யாவின் 44-வது படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கும் 'புறநானூறு' படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதில் துல்கர் சல்மான் , நஸ்ரியா உட்பட பலர் நடிக்க இருந்தனர்.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதால் அதைத் தள்ளி வைப்பதாக அறிவித்தனர். இதையடுத்து, சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியானது.

இதை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு நாளை அந்தமானில் தொடங்குகிறது. அங்கு 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com