உடுப்பி மூகாம்பிகை கோவிலில் நடிகை பூஜா ஹெக்டே சாமி தரிசனம்

பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அடிக்கடி வந்து வழிபடுவது வழக்கம்.
உடுப்பி மூகாம்பிகை கோவிலில் நடிகை பூஜா ஹெக்டே சாமி தரிசனம்
Published on

உடுப்பி,

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் பூஜா ஹெக்டே, தொடர்ந்து பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்த அவர், தனது அழகு மற்றும் நடிப்பு திறமையால் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்றுள்ளார்.

இவர், மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பிரபலமான நடிகையாக உயர்ந்துள்ளார். மேலும், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு பூஜா ஹெக்டே நேற்று சென்று தரிசனம் செய்தார். பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அடிக்கடி வந்து வழிபடுவது வழக்கம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com