'சூர்யா 44' படம் குறித்த நடிகை பூஜா ஹெக்டேவின் பதிவு வைரல்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யாவின் 44-வது படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
'சூர்யா 44' படம் குறித்த நடிகை பூஜா ஹெக்டேவின் பதிவு வைரல்
Published on

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் . சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்த கையோடு தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'சூர்யா 44' படம் குறித்த தகவலை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, "கார்த்திக் சுப்புராஜ் ஒரு காதல் கதையை எழுதி இருக்கிறார் என்றால் அது எப்படி இருக்கும்? அதுதான் சூர்யா 44" என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

X

Daily Thanthi
www.dailythanthi.com