விரைவில் கோலிவுட்டில் களமிறங்கும் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்

தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் பிரக்யா ஜெய்ஸ்வால், விரைவில் தமிழ் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் கோலிவுட்டில் களமிறங்கும் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்
Published on: 

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரக்யா ஜெய்ஸ்வால். 'ஆச்சாரி', 'அகண்டா', 'டாக்கு மகாராஜ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், தனது நடிப்பாலும் கவர்ச்சியான தோற்றத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் பிரக்யா ஜெய்ஸ்வால், விரைவில் தமிழ் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க அழைப்பு?

தற்போது பிரக்யா ஜெய்ஸ்வால், 'டைசன் நாயுடு' என்ற தெலுங்கு படத்திலும், 'சூர்யா - ஆண்ட் சே ஆரம்ப் தக்' என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவரை தமிழ் படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பிரக்யா ஜெய்ஸ்வால் தமிழில் அறிமுகமாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

கதையைக் கேட்டு ஆர்வம்

இதற்கு முன்பும் பல தமிழ் படங்களின் கதைகளை அவர் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது கேட்கப்பட்டுள்ள கதை அவருக்குப் பிடித்திருப்பதாகவும், அதில் நடிப்பதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், “பிரக்யா ஜெய்ஸ்வால் பல தமிழ் படங்களின் கதைகளைக் கேட்டுள்ளார். ஆனால், இம்முறை அவரிடம் கூறப்பட்ட கதை மிகவும் பிடித்துள்ளது. எனவே, அவர் நடிக்கச் சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், பிரக்யா ஜெய்ஸ்வாலின் தமிழ் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

X