பிரியா வாரியர் கண்ணடிக்கும் படகாட்சி, பலகோடிக்கு வியாபாரம் பேசப்படுகிறது

பிரியா வாரியர் கண்ணடிக்கும் படகாட்சிக்காக ‘ஒரு அடார் லவ்’ படம் திரைக்கு வரும் முன்பே கோடிக்கணக்கான லாபம் கொட்டுவதாக கூறப்படுகிறது.
பிரியா வாரியர் கண்ணடிக்கும் படகாட்சி, பலகோடிக்கு வியாபாரம் பேசப்படுகிறது
Published on

லையாளத்தில் தயாரான ஒரு அடார் லவ் படத்தின் பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ள நடிகை பிரியா வாரியார் கண்ணடிக்கும் காட்சி இணயதளங்களை தெறிக்க விட்டுள்ளது.

அந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் கதாநாயகி பிரியா வாரியர் பள்ளி சீருடையில் சக மாணவனை பார்த்து புருவங்களை நெளித்தும் கண்களை அசைத்தும் வெட்கப் புன்னகை சிந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் பரவி இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் ஒரே நாளில் இந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக பிரபலமாகி விட்டார் பிரியா வாரியர்.

பாடலை யுடியூப்பில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டி உள்ளது.

பிரியா வாரியருக்கு போன் அழைப்புகள் குவிகின்றன. இதனால் வீட்டில் இருந்து வெளியேறி கல்லூரி விடுதிக்கு சென்று விட்டார். பாடல் ஹிட்டானது குறித்து பிரியா வாரியர் கூறும்போது, இந்த பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. பாடலில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக டைரக்டர் சொன்னபடி கண்ணடித்தும் புருவத்தை உயர்த்தியும் நடித்தேன். என் மீது பலர் காதலில் விழுந்து இருப்பதாக சொல்கிறார்கள். இது எனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது. என்றார்.

ஒரு அடார் லவ் படத்தை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட தயாரிப்பாளர்கள் மத்தியில் போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் கேரளாவில் முகாமிட்டு டப்பிங் உரிமைக்கு விலைபேசி வருகிறார்கள். தெலுங்கில் வெளியிட படக்குழுவினர் ரூ.2 கோடி கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையாளத்தில் இந்த படத்துக்கு ஆன மொத்த செலவே ரூ.2 கோடிக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் கண்ணடிக்கும் பாடல் காட்சிக்காக மற்ற மொழிகளில் வெளியிட அதிக விலை பேசுகின்றனர் என்றார் ஒரு தயாரிப்பாளர். இந்த படம் திரைக்கு வரும் முன்பே கோடிக்கணக்கான லாபம் கொட்டுவதாக கூறப் படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com