5 நிமிடம் நடனம் ஆட நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.5 கோடி சம்பளம்

நடிகை பிரியங்கா சோப்ராவை விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றில் 5 நிமிடம் நடனம் ஆட ரூ.5 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்துள்ளனர்.
5 நிமிடம் நடனம் ஆட நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.5 கோடி சம்பளம்
Published on

மும்பை,

உலக அழகியாக தேர்வான பிரியங்கா சோப்ரா 2002ல் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானார். பின்னர் இந்தி படங்களில் நடித்து அங்கு முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். ஒரு படத்தில் நடிக்க ரூ.8 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் குவாண்டிகோ டெலிவிஷன் தொடரில் நடித்து ஹாலிவுட்டிலும் பிரபலமாகி இருக்கிறார்.

பிரியங்கா சோப்ராவை மும்பையில் நடக்கும் விருது வழங்கும் விழா நிகழ்ச்சியொன்றில் நடனம் ஆட ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியா வரப்போவதாக இன்ஸ்டாகிராமில் அவர் தகவல் பதிவிட்டு உள்ளார். இதில் நடனம் ஆடுவதற்காக பிரியங்கா சோப்ரா வாங்கபோகும் சம்பளம்தான் இந்தி பட உலகில் பரபரப்பான விஷயமாக பேசப்பட்டு வருகிறது.

5 நிமிடம் நடனம் ஆடுவதற்கு ரூ.5 கோடி கேட்டதாகவும் அந்த தொகையை கொடுக்க விழாவை ஏற்பாடு செய்தவர்கள் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பிரியங்கா சோப்ரா நடித்த படங்களில் இருந்து பிரபலமான சில பாடல்களை தொகுத்து அதற்கு அவர் நடனம் ஆட இருக்கிறார். 5 நிமிடம் நடனத்துக்கு ரூ.5 கோடி சம்பளமாக இதுவரை எந்த நடிகையும் வாங்கியது இல்லை என்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com