கொரோனா நோயாளிகளை வீடியோ, புகைப்படம் எடுக்க நடிகை எதிர்ப்பு

கொரோனா நோயாளிகளை வீடியோ, புகைப்படம் எடுக்க நடிகை மிருணாளினி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளை வீடியோ, புகைப்படம் எடுக்க நடிகை எதிர்ப்பு
Published on

சென்னை,

தமிழில் சூப்பர் டீலக்ஸ், சாம்பியன் ஆகிய படங்களில் நடித்துள்ளவர் மிருணாளினி. தற்போது விக்ரமுடன் கோப்ரா, எம்.ஜி.ஆர் நகர் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். கொரோனா நோயாளிகளை வீடியோ எடுத்து வெளியிட்டு அவமதிப்பதை கண்டித்து மிருணாளினி கூறியிருப்பதாவது:-

பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் யாருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவரை ஆம்புலன்சில் அழைத்துச்செல்லும்போது அதனை வீடியோவோ புகைப்படமோ எடுக்காதீர்கள். அப்படி யாரேனும் செய்தால் தடுத்து நிறுத்துங்கள். மாறாக பால்கனியிலோ, வீட்டின் கதவுக்கு அருகிலோ நின்று கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை பார்த்து கட்டை விரலை உயர்த்தி விரைவில் குணமடைந்து திரும்புவீர்கள் என்று வாழ்த்து சொல்லுங்கள். கொரோனா பரவுவதை பார்த்தால் உங்களுக்கும் ஆன்புலன்ஸ் காத்திருக்கிறது என்ற நிலைமைதான் உள்ளது. எனவே கொரோனா நோயாளிகளை மதியுங்கள். அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தாதீர்கள். அவதூறு செய்யாதீர்கள். தொற்று ஏற்பட்டவர் குற்றவாளி இல்லை. குணமடைந்து திரும்பி விடுவார். அவர்கள் மீது அன்பை செலுத்துவோம். பாதுகாப்பாகவும் நம்பிக்கையோடும் வீட்டிலேயே இருங்கள் என மிருணாளினி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com