தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடங்கி வைத்த நடிகை ராதிகா

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடங்கி வைத்த நடிகை ராதிகா
Published on: 

தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கத்தை நடிகை ராதிகா தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் நலனுக்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், கில்டு, சிறுபட தயாரிப்பாளர்கள் சங்கம், பிலிம் சேம்பர் என பல அமைப்புகள் உள்ளன.

இந்நிலையில் தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் என்ற சங்கத்தை நடிகை ராதிகா தொடங்கி வைத்துள்ளார். இந்த சங்கத்தின் கவுரவ தலைவர்களாக ராதிகா, சத்யஜோதி தியாகராஜன் செயல்படுவார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் இணைந்து புதிய சங்கம் தொடங்கினர். அதாவது ஓடிடிக்காக படம் தயாரிப்பவர்கள் இணைந்து உருவாக்கி சங்கம் இது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் துறைகளைச் சேர்ந்த முக்கிய தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியுள்ளன.

தொலைக்காட்சி துறையில் நீண்ட காலமாக நிலவி வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வு காண்பது, கலைஞர்களின் கால்ஷீட் மற்றும் பணிநேரங்களை முறைப்படுத்துவது, தயாரிப்பாளர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பது மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளுக்கு இடையிலான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவது ஆகியவை இந்த புதிய சங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இதன் மூலம் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே ஒரு வலுவான பாலமாக இந்த அமைப்பு செயல்பட்டு, மாநில எல்லைகளைக் கடந்து நடைபெறும் தயாரிப்புப் பணிகள் சீரான முறையிலும், வெளிப்படைத் தன்மையுடனும், ஒழுங்குமுறையுடனும் நடைபெறுவதற்கு தேவையான ஆதரவை வழங்கும். இந்த புதிய கவுன்சிலின் நிர்வாகக் குழுவின் தலைவராக தெலுங்கு தொலைக்காட்சி துறையைச் சேர்ந்த பிரசாத் செயல்படுவார். துணைத் தலைவர்களாக தமிழகத்தைச் சேர்ந்த உதயசங்கர், கன்னட துறையைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். ராஜவேலு பொதுச் செயலாளராக செயல்படுவார் என்று சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com