நடிகை ராதிகாவின் தாயார் காலமானார்...!


நடிகை ராதிகாவின் தாயார் காலமானார்...!
x
தினத்தந்தி 21 Sept 2025 10:54 PM IST (Updated: 25 Sept 2025 9:47 AM IST)
t-max-icont-min-icon

நடிகை ராதிகாவின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானார்.

சென்னை,

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகா-நிரோஷா ஆகியோரின் தாயாருமான கீதா ராதா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கீதா ராதா மறைக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது உடலுக்கு திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை (22.09.25) மாலை 4.30 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக நடிகை ராதிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

“மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், எனது தாயாருமான கீதா ராதா (வயது 86) இன்று (21.09.2025) ஞாயிற்றுக்கிழமை மாலை மணிக்கு உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக எண் 3, பின்னி ரோடு, மனசாரவா அபார்ட்மெண்ட், போயஸ் கார்டன், சென்னை - 86 இல் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதி சடங்கு நாளை மாலை 4.30 மணிக்கு மேல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story