நடிகை ராக்கி சாவந்துக்கு 10 காதலர்கள்; வீடியோ வெளியிட்ட நடிகை ஷெர்லின் சோப்ரா மீது வழக்கு

நடிகை ராக்கி சாவந்துக்கு 10 காதலர்கள் உள்ளனர் என வீடியோ வெளியிட்டதற்காக நடிகை ஷெர்லின் சோப்ரா மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
நடிகை ராக்கி சாவந்துக்கு 10 காதலர்கள்; வீடியோ வெளியிட்ட நடிகை ஷெர்லின் சோப்ரா மீது வழக்கு
Published on

புனே,

மராட்டியத்தில் மும்பை போலீசில் நடிகை ஷெர்லின் சோப்ரா மீது நடிகை ராக்கி சாவந்த் பரபரப்பு புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் நடிகை ஷெர்லின் சோப்ரா வீடியோ ஒன்றை கடந்த 6-ந்தேதி வெளியிட்டார்.

அதில், தனக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தி, தகாத வார்த்தைகளையும் பேசியுள்ளார் என தெரிவித்து உள்ளார். இதுபற்றி ராக்கி சாவந்த் ஊடகத்தினரிடம் கூறும்போது, சோப்ராவின் பேச்சுகளால் தனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.

எனது சமீபத்திய காதலர் என்னை பார்த்து, ஷெர்லின் சோப்ரா கூறியதில் ஏதும் உண்மை இருக்கா? உண்மையில், எனக்கு 10 ஆண் நண்பர்கள் உள்ளனரா? என என்னிடம் கேட்கிறார்.

சோப்ரா வந்து, அவர் என்ன விரும்பினாரோ அதனை ஊடகத்திடம் கூறி விட்டு போய் விட்டார். அதற்கான பலனை நான் அனுபவிக்கிறேன் என ராக்கி சாவந்த் வேதனையுடன் கூறியுள்ளார்.

இந்தி பட தயாரிப்பாளர் சஜித் கான் மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது கடந்த காலத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி சோப்ரா பரபரப்பு ஏற்படுத்தினார். அப்போது அவர்களுக்கு ஆதரவாக ராக்கி பரிந்து பேசினார்.

இந்த நிலையில், ராக்கி மற்றும் சோப்ரா இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. ராக்கி மற்றும் அவரது வழக்கறிஞர் மீதும் பதிலுக்கு சோப்ரா போலீசில் புகார் அளித்து உள்ளார்.

அதில், செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு எதிராக அவதூறு ஏற்படும் வகையிலான வீடியோவை 2 பேரும் வெளியிட்டு உள்ளனர். தகாத வார்த்தைகளையும் ராக்கி பேசியுள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது என புகாரை பெற்று கொண்ட மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com