நடுரோட்டில் வைத்து பாலியல் தொல்லை கண் கலங்கிய பிரபல நடிகை

கடந்த சில மாதங்களாக பிரபல நடிகைகள் தானாகவே முன் வந்து தங்களுக்கு நேர்ந்த, பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
நடுரோட்டில் வைத்து பாலியல் தொல்லை கண் கலங்கிய பிரபல நடிகை
Published on

தமிழில் கண்ட நாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கேசன்ரா, தொடர்ந்து அழகிய அசூரா, பஞ்சாமிர்தம்,கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம், மாநகரம்,சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து உள்ளார். தற்போது கவுதம் கார்த்திக்குடன் மிஸ்டர் சந்திர மவுலி படத்தில் நடித்து வருகிறார்

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் பல்வேறு படங்கள் நடித்துள்ள ரெஜினா கேசன்ரா. தன்னுடைய வாழ்வில் நடந்த மிகவும் கசப்பான சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஒரு நாள் நான் சென்னையில் உள்ள ஈகா தியேட்டர் பாலத்தில் நண்பர்கள் சிலருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்தேன். அப்போது எதிரே வந்த இளைஞர் ஒருவர் திடீர் என தன்னுடைய உதட்டை பிடித்துவிட்டதாகவும் அந்த சம்பவம் தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் இருந்து மீள எனக்கு சில நிமிடம் ஆனது என்றும், பின் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தனக்கு தெரிந்து அத்தனை கெட்டவார்த்தைகளாலும் திட்டினேன்.

இதே போல் எனக்கு பல முறை நிகழ்ந்துள்ளது. இதற்காக நான் அழுதது மட்டும் இன்றி அவர்களை கண்டித்து அடித்தும் உள்ளேன் என கண்கள் கலங்கியபடி கூறியுள்ளார் ரெஜினா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com