நடிகை ரெஜினாவின் கசப்பான அனுபவம்...!

ரெஜினா சினிமா வாய்ப்பு கேட்டபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்
நடிகை ரெஜினாவின் கசப்பான அனுபவம்...!
Published on

சிவகார்த்திகேயனின் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. கண்டநாள் முதல், மாநகரம், ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமவுலி, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.இந்த நிலையில் சினிமா வாய்ப்பு கேட்டபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ரெஜினா அளித்துள்ள பேட்டியில், "நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் பட வாய்ப்பு கேட்டு சிலரை அணுகினேன். அதில் ஒருவர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு நடிக்க வாய்ப்பு கொடுக்கிறேன். அட்ஜஸ்ட்மென்டுக்கு சம்மதித்தால் உடனே படப்பிடிப்புக்கு செல்லலாம் என்றார்.

அவர் சொன்ன அர்த்தம் புரியவில்லை. சம்பளம் விஷயம் பற்றி சொல்கிறார் என்று நினைத்து சரி எனது மானேஜர் உங்களிடம் பேசுவார் என்றேன். மானேஜர் பேசிய பிறகுதான் போன் செய்தவர் படுக்கைக்கு அழைக்கும் நோக்கில் என்னை கேட்டு இருக்கிறார் என்று புரிந்தது.

சில நடிகைகள் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொண்டு இருக்கலாம். இன்னும் சில நடிகைகள் பெயர் வாங்க பொய் கூட சொல்வார்கள். உண்மை அவர்களுக்கு மட்டுமே தெரியும்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com