பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகை ராக்கி சாவந்த் புதிய யோசனை

பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். தமிழில் ‘என் சகியே’ ‘முத்திரை’ ஆகிய படங்களில் நடனம் ஆடி உள்ளார். இவருக்கும் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகை ராக்கி சாவந்த் புதிய யோசனை
Published on

படப்பிடிப்பில் தனுஸ்ரீ தத்தா போதையில் இருந்தார் என்று ராக்கி சாவந்த் கூறியதால் அவர் மீது தனுஸ்ரீ மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளர்.

சஜித்கான் மீ டூ வில் சிக்கியதால் அவர் டைரக்டு செய்வதாக இருந்த ஹவுஸ்புல்4 படத்தில் இருந்து அக்ஷய்குமார் விலகியதையும் ராக்கி சாவந்த் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

நான் அக்ஷய்குமார் மீது மரியாதை வைத்து இருந்தேன். அவர் ஹவுஸ்புல்4 படத்தை நிறுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இதுபோல் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. நானா படேகர், சஜித்கான் இருவருமே அப்பாவிகள். பாலியல் புகாரில் சிக்கி உள்ள அலோக்நாத் வயதானவர். இந்த வயதில் அவர் மீது செக்ஸ் புகார் கூறுவது நம்பும்படி இல்லை. அவர் நல்லவர்.

மேலும் பாலியல் புகார் கூறப்பட்ட வின்டா நந்தா உள்ளிட்ட எல்லோருமே நல்லவர்கள்தான். திரையுலகில் பெண்கள்தான் மோசமான தகவல்களை பரப்புகிறார்கள். தனுஸ்ரீதத்தாவை யாரும் ஆதரிக்க வேண்டாம். இந்தியாவில் பாலியல் பலாத்காரங்களை நிறுத்த வேண்டும் என்றால் திரைப்படங்களில் இடம் பெறும் பலாத்கார காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு ராக்கி சாவந்த் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com