கடந்த 1992-ம் ஆண்டு வெளியான ‘செம்பருத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. சரத்குமாருடன் ‘சூரியன்’, ரஜினியுடன் ‘உழைப்பாளி’, கார்த்திக் உடன் ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
90களில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்தார் ரோஜா. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு நடிகை ரோஜா சினிமாவில் நடிப்பை குறைத்துக்கொண்டார். தற்போது ‘லெனின் பாண்டியன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். சின்னத்திரை நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார்.
நடிகை ரோஜாவை ‘செம்பருத்தி’ படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. பின்னர் இருவரும் காதலித்து கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். நடிகை ரோஜாவை பொறுத்தவரை அவர் சினிமாவை தாண்டி அரசியலில் கவனம் செலுத்தினார்.கடந்த 2004-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆந்திராவின் நகரி தொகுதியில் போட்டியிட்டார் ரோஜா. ஆனால் அதில் தோற்றார். அதன் பிறகு 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு முறை நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். பின்னர் அமைச்சராகவும் பதவி வகித்தார் ரோஜா.
இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா செல்வமணி, அமெரிக்காவில் ‘லுடி ஸ்கூல் ஆப் இன்பர்மேட்டிக்ஸ், கம்ப்யூட்டிங் அண்ட் இன்ஜினியரிங்’ கல்லூரியில் கணினி அறிவியல் பயின்று வந்தார். அண்மையில் கூட அன்ஷு மாலிகாவுக்கு அமெரிக்காவின் ப்ளூமிங்டனில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகம் ‘ஹெர்மன் பி வெல்ஸ்’ விருது வழங்கி கவுரவித்தது.
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இந்த கவுரவத்தைப் பெறும் முதல் இந்திய மாணவி அன்ஷு மாலிகா, கல்வி மற்றும் தலைமைத்துவ பண்புகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதை பெற்ற சில நாட்களில், மற்றொரு சாதனையாக ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆந்திராவின் நகரி தொகுதியில் போட்டியிட்டார் ரோஜா. ஆனால் அதில் தோற்றார். அதன் பிறகு 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு முறை நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். பின்னர் அமைச்சராகவும் பதவி வகித்தார் ரோஜா.