அறுவை சிகிச்சையில் குணமாகி மகளுடன் புகைப்படம் எடுத்த நடிகை ரோஜா

நடிகை ரோஜாவுக்கு கர்ப்ப பையில் கட்டி இருந்ததால் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கர்ப்ப பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றப்பட்டு உள்ளது.
அறுவை சிகிச்சையில் குணமாகி மகளுடன் புகைப்படம் எடுத்த நடிகை ரோஜா
Published on

நடிகை ரோஜாவுக்கு கர்ப்ப பையில் கட்டி இருந்ததால் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கர்ப்ப பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ரோஜாவின் கணவரும், டைரக்டருமான ஆர்.கே.செல்வமணி கூறும்போது, ரோஜாவுக்கு இரண்டு ஆபரேசன்கள் நடந்துள்ளன. கடந்த வருடமே இந்த ஆபரேசன் நடக்க வேண்டி இருந்தது. தேர்தல் மற்றும் கொரோனா காரணங்களால் நடக்கவில்லை. தாமதம் ஏற்பட்டதால் பிரச்சினையாகி விட்டது. இப்போது பெரிய அளவில் ஆபரேசன் நடந்தது. எல்லோரது பிரார்த்தனையாலும், கடவுள் அருளாலும் நல்லபடியாக ஆபரேசன் முடிந்துள்ளது' என்று தெரிவித்து இருந்தார்.

சிகிச்சைக்கு பிறகு ரோஜா பூரண குணமடைந்து உள்ளார். ஒருவாரம் ஓய்வில் இருந்த அவர், தற்போது தனது மகள் அன்சுமாலிகாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அன்சு மாலிகா விரைவில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ரோஜா தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். பின்னர் ஆந்திர அரசியலில் ஈடுபட்டு தற்போது நகரி தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com