திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

தேர்தல் வெற்றி பெறவும், மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க வேண்டும் என சிறப்பு பூஜைகள் நடத்தி நடிகை ரோஜா வழிபட்டார்.
திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
Published on

திருத்தணி,

ஆந்திர மாநிலத்தில் சட்டசபை மற்றும் லேக்சபா தேர்தல் கடந்த மாதம், 13ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. சட்டசபை தேர்தலில் சுற்றுசூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான நடிகை ரேஜா, நகரி சட்டசபை தெகுதியில் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் பேட்டியிட்டார்.

இந்நிலையில் நாளை சட்டசபை மற்றும் லேக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஆகையால் அமைச்சர் ரேஜா இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் திருத்தணி முருகன் மலைக்கேவிலுக்கு காரில் வந்தார். பின், சிறப்பு வழியில் அமைச்சர் ரேஜா சென்று ஆபத்சகாய விநாயகர், சண்முகர், மூலவர், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் முருகர் ஆகிய சன்னதிகளில் தேர்தல் வெற்றி பெறவும், மீண்டும் ஜெகன்மேகன் ரெட்டி ஆட்சி அமைக்க வேண்டும் என சிறப்பு பூஜைகள் நடத்தி வழிப்பட்டார். தெடர்ந்து ரேஜாவுக்கு கேவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com