நடிகை ரோஜா மருத்துவமனையில் திடீர் அனுமதி...!

நடிகை ரோஜா திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை ரோஜா மருத்துவமனையில் திடீர் அனுமதி...!
Published on

சென்னை

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏவாகவும் அம்மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு மந்திரியாகவும் இருப்பவர் நடிகை ரோஜா.

தெலுங்கு படங்களின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான நடிகை ரோஜா, ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், சரத்குமார், மம்முட்டி, அர்ஜூன், பிரபு, கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ரோஜா, தெலுங்கு தேசம் கட்சியில் கடந்த 1999ஆம் ஆண்டு இணைந்தார். அந்த கட்சியின் தெலுங்கு மகிளா அணி தலைவராக இருந்த நடிகை ரோஜா 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

அதன்பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய நடிகை ரோஜா, பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா, வெற்றி பெற்ற நடிகை ரோஜா எம்எல்ஏவானார்.

தற்போது அம்மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு மந்திரியாக உள்ளார் ரோஜா. இந்நிலையில் நடிகை ரோஜா திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கால் வலி மற்றும் கால் வீக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com