அமீரக அரசின் கோல்டன் விசாவை பெற்ற நடிகை ராய் லட்சுமி

ஐக்கிய அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை பெற்றவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.
அமீரக அரசின் கோல்டன் விசாவை பெற்ற நடிகை ராய் லட்சுமி
Published on

ஏற்கனவே இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் நடிகைகள் ஊர்வசி ரவுடாலா, மீரா ஜாஸ்மின், அமலாபால் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். நடிகர் பார்த்திபன், நடிகை திரிஷா ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தற்போது நடிகை ராய் லட்சுமியும் கோல்டன் விசா பெற்றுள்ளார். இதற்காக அமீரக அரசுக்கு ராய்லட்சுமி நன்றி தெரிவித்து உள்ளார். ராய் லட்சுமி தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com