‘காட் மோட்’ பாடலுக்கு நடிகை ருக்மிணி வசந்த் கொடுத்த ரியாக்சன்...வைரல்


Actress Rukmini Vasanths reaction to the song God Mode...goes viral
x

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்தின் காட் மோட் (God Mode) பாடல் வெளியானது.

சென்னை,

‘கருப்பு’ படத்தின் முதல் பாடலான காட் மோட் சமீபத்தில் வெளியானநிலையில், அதனை பார்த்து நடிகை ருக்மிணி வசந்த் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.

மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று, ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் முதல் பாடலான காட் மோட் வெளியானது. இது சூர்யாவின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்நிலையில், இப்பாடலை பார்த்த நடிகை ருக்மிணி வசந்த், நெருப்பு எமோஜை பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story