திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை - 'ஜெயம்' பட நடிகை

சதா தனது திருமணம் குறித்து அவர் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை - 'ஜெயம்' பட நடிகை
Published on

'ஜெயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் சதா. இந்தப் படத்தில் அவரது `போயா... போ' என்ற வசனம் மிகப் பிரபலம். 'அன்னியன்', 'உன்னாலே உன்னாலே' என அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தெலுங்கிலும் சில படங்கள் நடித்தார்.

சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த சதா, 2018-ஆண்டில் 'டார்ச்லைட்' என்ற படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்தார். அந்தப் படத்தில் அவர் விபசார அழகியாக நடித்தார். தற்போது 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒரு தெலுங்கு படத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

37 வயதாகும் சதா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது தனது திருமணம் குறித்து அவர் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதில், "தற்போது வரை திருமணம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. திருமணம் பற்றிய சிந்தனையும் என் மனதில் ஏற்படவில்லை. எனக்குப் பொருத்தமான அந்த நபர் இன்னும் என் கண்களில் தென்படவில்லை. ஒருவேளை அந்த நபர் தென்பட்டால் உடனடியாக அவரை திருமணம் செய்து கொள்வேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com