விஜய், அஜித் படங்களில் நடிக்க மறுத்த நடிகை சாய் பல்லவி...!

விஜய், அஜித் படங்களில் நல்ல வேடம் கிடைக்காததால் சாய் பல்லவி நடிக்க மறுத்துவிட்டார்.
விஜய், அஜித் படங்களில் நடிக்க மறுத்த நடிகை சாய் பல்லவி...!
Published on

சென்னை

அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இப்படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி தனது யதார்த்தமான நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்தார். பிரேமம் படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தாலும், 'மலர்' டீச்சர் வேடத்தில் நடித்த சாய் பல்லவிதான் அதிக பாராட்டுகளைப் பெற்றார்.

பிரேமம் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார் சாய் பல்லவி. பின்னர் தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்ஜிகே ஆகிய படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு, சாய் பல்லவி தெலுங்கு பக்கம் சென்றார், அங்கு அவர் தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளைப் பெற்றார். குறுகிய காலத்தில் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக மாறியவர் சாய் பல்லவி.

அவரது கடைசி படம் 'கார்கி'. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் விஜய், அஜித் கூட்டணியில் ஹீரோயினாக நடிக்க நடிகை சாய் பல்லவி மறுத்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதம் பொங்கலுக்கு வெளியான விஜய்யின் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் சாய் பல்லவியை அணுகினர். ஆனால் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த கதாபாத்திரத்திற்கு ராஷ்மிகா தேர்வு செய்யப்பட்டார். வாரிசுக்கு ஸ்கோப் இல்லாவிட்டாலும் விஜய்யுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் எனபதால் நடித்ததாக் சமீபத்தில் ஒரு பேட்டியில் ராஷ்மிகாவே கூறி இருந்தார்.

இதேபோல், கடந்த ஆண்டு வெளியான ஏ.வினோத்-அஜித் கூட்டணியில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க திட்டமிடப்பட்டது. மேலும், நல்ல வேடம் கிடைக்காததால் சாய் பல்லவி நடிக்க மறுத்துவிட்டார். முன்னணி நடிகரின் படமாக இருந்தாலும், முக்கியத்துவம் இல்லாத வேடங்களில் நடிக்க வேண்டாம் என்று சாய் பல்லவி எடுத்த முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கமலின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com