சின்னத்திரைக்குள் நுழையும் நடிகை சந்தியா

பிரபல டி.வி. தொடர் ஒன்றில் நடிகை சந்தியா சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
'காதல்' படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சந்தியா. அதனைத்தொடர்ந்து 'டிஷ்யூம்', 'வல்லவன்', 'கண்ணாமூச்சி ஏனடா', 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.
2015-ம் ஆண்டில் சந்தியா, அர்ஜூன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதனைத்தொடர்ந்து ஓரிரு படங்களில் தலைகாட்டியவர், 2016-க்கு பிறகு படங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டார். கடைசியாக 'ருத்ரவதி' என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சினிமாவில் இருந்து ஒதுங்கி குடும்பம், குழந்தை என கவனித்து வந்த சந்தியா இப்போது சின்னத்திரையில் குதிக்க இருக்கிறார். பிரபல டி.வி. தொடர் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் சில வாரங்கள் தலைகாட்ட இருக்கிறாராம். ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து தொடர்ந்து டி.வி. தொடரில் நடிப்பது குறித்து முடிவு செய்வாராம்.
Related Tags :
Next Story






