நடிகை சாயிஷாவை மணக்கிறார் : திருமண அழைப்பிதழ் கொடுக்கும் ஆர்யா

நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இருவரும் கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்தபோது நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. அதனை இருவரும் மறுக்கவில்லை.
நடிகை சாயிஷாவை மணக்கிறார் : திருமண அழைப்பிதழ் கொடுக்கும் ஆர்யா
Published on

சாயிஷாவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்துடன் திருமணம் குறித்த தகவலை காதலர் தினத்தன்று டுவிட்டர் பக்கத்தில் ஆர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சாயிஷா பிரபல இந்தி நட்சத்திர தம்பதிகள் திலீப்குமார்-சாயிரா பானுவின் பேத்தி ஆவார். ஜெயம்ரவியுடன் வனமகன், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆர்யா-சாயிஷா திருமணம் வருகிற 10-ந் தேதி மாலை ஐதராபாத்தில் நடக்கிறது.

ஆர்யா தற்போது நடிகர்-நடிகைகளுக்கு நேரில் திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். விஷாலை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார். அதனை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் பதிவிட்ட விஷால், என் இதயத்துக்கு நெருக்கமான தருணம். ஆர்யாவின் திருமண அழைப்பிதழை கையில் வைத்துள்ளேன். இதை நம்பவே முடியவில்லை. ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com