நடிகை ரகசிய திருமணம்?

பூஜிதா பொன்னடாவும், பிரபல இசையமைப்பாளரும் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.
நடிகை ரகசிய திருமணம்?
Published on

தமிழில் 'செவன்' படத்தில் நடித்தவர் பூஜிதா பொன்னடா. இவர் தற்போது 'பகவான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பூஜிதா பொன்னடாவும், பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் தமிழில் வில்லு, சச்சின், சிங்கம், கந்தசாமி, வீரம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏற்கனவே சில நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இப்போது நடிகை பூஜிதா பொன்னடாவை மணந்துள்ளதாக தகவல் பரவி உள்ளது. இதுகுறித்து பூஜிதா பொன்னடா அளித்துள்ள விளக்கத்தில், ''நான் தேவி ஸ்ரீபிரசாத்தை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல. இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து உருவாகின்றன என்று புரியவில்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை. சமூக வலைத்தளத்தில் எனக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புகின்றனர்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com