சிபிராஜ் பெயரில் நடிகை தேர்வு மோசடி

சிபிராஜ் கைவசம் மாயோன், ரங்கா, ரேஞ்சர், வட்டம் ஆகிய படங்கள் உள்ளன. இதில் மாயோன் படம் முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.
சிபிராஜ் பெயரில் நடிகை தேர்வு மோசடி
Published on

இந்த நிலையில் சிபிராஜ் நடிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க 18 வயது முதல் 28 வயது வரை உள்ள கதாநாயகி மற்றும் அவரது நண்பர்களாக நடிக்க 20 வயது முதல் 28 வயது வரை உள்ள நடிகர்கள் தேவை என்று விளம்பரம் வெளியானது. மேலும் துணை நடிகர்களாக நடிக்க 22 வயது முதல் 25 வயதுவரை உள்ளவர்கள் தேவை என்றும் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களுடன் வாட்ஸ் அப்பில்

தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த விளம்பரம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதற்கு விளக்கம் அளித்து சிபிராஜ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நண்பர்களே கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் சுற்றிகொண்டு இருக்கும் இந்த விளம்பரம் எனது கவனத்துக்கு வந்தது. இது போலியான நடிகர் தேர்வு விளம்பரம் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்த விளம்பரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com