நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி...!

நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி...!
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷோபனா. இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பொன்மனச் செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன், தளபதி, சிவா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது நடன பள்ளி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதும் எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் வலி, குளிர் நடுக்கம், தொண்டை கரகரப்பு ஆகியவை எனக்கு அறிகுறிகளாக இருந்தன. முதல் நாளில் இத்தனை அறிகுறிகள் இருந்தன. பின்னர் படிபடியாக அந்த அற்குறிகள் குறையத்தொடங்கியது.

தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அது வைரசில் இருந்து 85 சதவிகிதம் பாதுகாப்பு அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வைரஸ் பெருந்தொற்று இந்த ஒமைக்ரானுடன் முடிவுக்கு வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com