திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்று காலை நடிகை ஸ்ரேயா தனது தாயார் நீரஜாவுடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். திருமலைக்கு வந்த அவரை அதிகாரிகள் வரவேற்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அழைத்துச் சென்று சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.

கோவிலுக்குள் சென்ற நடிகை ஸ்ரேயா மற்றும் அவரின் தாயார் நீரஜா ஆகியோர் மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ரெங்கநாயக்கர் மண்டபத்தில் லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம் வழங்கினர். வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com